நல்லவாடில் டீசல் பங்க் பா.ஜ., வேட்பாளர் வாக்குறுதி
நல்லவாடில் டீசல் பங்க் பா.ஜ., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 04, 2026 09:57 PM

புதுச்சேரி: மணவெளி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டப்பணிகளை பட்டியலிட்டு பா.ஜ., வேட்பாளர் செல்வம் ஓட்டு சேகரித்தார்.
மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம் நேற்று நல்லவாடு மீனவ கிராமத்தில் ஓட்டு சேகரித்தார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி இறங்கு தளம் அமைத்து கொடுத்தது. சுனாமி குடியிருப்புகளுக்கு உரிமை ஆவண பட்டா பெற்று தந்துள்ளேன். மேலும், சாலை, கழிவு நீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்.
வரும் தேர்தலில், தாமரை சின்னத்தில் ஓட்டளித்து, என்னை வெற்றிப்பெற செய்தால், நல்லவாடில், டீசல் பங்க் அமைத்து தவருவேன். வடக்கு பகுதியில் புதிய கலையரங்கம் மற்றும் மீன்பிடி இறங்குதல பணிகளை விரைந்து முடிப்பேன் என, வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
அப்போது, தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
