மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு: புதுச்சேரியில் பா.ஜ., கொண்டாட்டம்
மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு: புதுச்சேரியில் பா.ஜ., கொண்டாட்டம்
UPDATED : மே 09, 2026 11:22 PM
ADDED : மே 09, 2026 11:04 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மேற்கு வங்கத்தில் பா.ஜ., முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றதையொட்டி, புதுச்சேரி பா.ஜ.,வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி பா.ஜ., சார்பில், மேற்கு வங்கத்தில் பா.ஜ., பெற்றுள்ள வெற்றியையும், முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றதையொட்டி, நேற்று மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் இந்திரா சதுக்கம் அருகில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார், துணைத் தலைவர்கள் ரத்தினவேல், ஜெயலட்சுமி, மாநில செயலாளர்கள் புகழேந்தி, தமிழ்மாறன், பிரிவு பொறுப்பாளர் அசோக் பாபு, பொருளாளர் ராஜகணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
