ADDED : நவ 29, 2025 07:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மைய குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.
மாநில த் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன் குமார், கல்யாணசுந்தரம், செல்வம், தீபாய்ந்தான், ரிச்சர்ட் ஜான்குமார், ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், துணைத் தலைவர்கள் ரத்தனவேல், ஜெயக்குமார், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர்., தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தொகுதி தலைவர்கள், அனைத்து தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள், மாநில அணி தலைவர்கள் மற்றும் பிரிவு அமைப்பாளர்கள் பங்கேற்று, தங்களது பகுப்பாய்வுகளை முன்வைத்தனர்.
தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்க, வரும் 6 மாதங்கள் முழுநேர கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என, அறிவுறுத்தினார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முன்னேற்றம், தொகுதி தலைவர்களின் தேர்தல் பணித்திட்டம், மத்திய மற்றும் மாநில அரசின் பயனாளர்களை நேரடியாக சந்தித்து தகவல் பகிர்வு செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை அகிலன், ஜெயலட்சுமி, தேர்தல் துறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், வேல்முருகன், நாகேஸ்வரன் செய்திருந்தனர்.
