/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பா.ஜ., - கம்யூ., மோதல் போலீஸ் தடியடி நடத்தியால் பரபரப்பு
/
புதுச்சேரியில் பா.ஜ., - கம்யூ., மோதல் போலீஸ் தடியடி நடத்தியால் பரபரப்பு
புதுச்சேரியில் பா.ஜ., - கம்யூ., மோதல் போலீஸ் தடியடி நடத்தியால் பரபரப்பு
புதுச்சேரியில் பா.ஜ., - கம்யூ., மோதல் போலீஸ் தடியடி நடத்தியால் பரபரப்பு
ADDED : டிச 24, 2025 05:37 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அனுமதியின்றி லெனின் சிலை வைத்த விவகாரத்தில், பா.ஜ., - கம்யூ.,வினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி திருவள்ளூவர் சாலை - லெனின் வீதி சந்திப்பில் மணிமேகலை பள்ளி அருகில் நேற்று முன்தினம் இரவு எவ்வித அனுமதியின்றி இந்திய கம்யூ., கட்சியினர் 6 அடி உயர லெனின் சிலையை நிறுவி, நேற்று காலை திறந்தனர்.
இதனை அறிந்த பா.ஜ., மூத்த நிர்வாகி சிவராஜ், பா.ஜ., தேர்தல் மேலாண்மைக் குழு இணை கன்வீனர் வெற்றிச் செல்வன் மற்றும் பா.ஜ., இந்து முன்னணி நிர்வாகிகள் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற கோரி நேற்று எஸ்.பி., யிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், இரவு 9:00 அளவில் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.,வினர் 3 அடி உயர விநாயகர் சிலையை, லெனின் சிலை அருகிலேயே வைத்து பூஜை செய்து, பஜனை பாடினர்.
அதனை அறிந்த கம்யூ., கட்சியினர் திரண்டு வந்து, பா.ஜ.,வினர் வைத்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதே நேரத்தில் பா.ஜ.,வினர், லெனின் சிலையை அகற்ற முயன்றனர். தகவலறிந்து வந்த உருளையான்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார் லேசான தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் பிரித்திவி ராஜியிடம், அனுமதி இல்லாமல் வைத்த லெனி ன் சிலையை அகற்றினால், நாங்கள் விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு கிளம்பு வதாக பா.ஜ.,வினர் கூறினர்.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறையினர், லெனின் சிலையை பேனர் சுற்றி மறைத்தனர். உடன் பா.ஜ.,வினர் விநாயகர் சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர்.
லெனின் சிலையை மூடியதை கண்டித்து கம்யூ., கட்சியினர், வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதனிடையே, கம்யூ., கட்சியினரின் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, இரவு 11:00 மணியளவில் மீண்டும் லெனின் சிலை திறக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

