/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம் பைபாசிற்கு வாஜ்பாய் பெயர்; பா.ஜ., கோரிக்கை
/
அரும்பார்த்தபுரம் பைபாசிற்கு வாஜ்பாய் பெயர்; பா.ஜ., கோரிக்கை
அரும்பார்த்தபுரம் பைபாசிற்கு வாஜ்பாய் பெயர்; பா.ஜ., கோரிக்கை
அரும்பார்த்தபுரம் பைபாசிற்கு வாஜ்பாய் பெயர்; பா.ஜ., கோரிக்கை
ADDED : மார் 22, 2025 03:21 AM
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்.
அசோக்பாபு எம்.எல்.ஏ.,(பா.ஜ): முதலியார்பேட்டை மேம்பாலம் முதல் அரும்பார்த்தபுரம் வரை செல்லும் பைபாஸ் சாலைக்கு முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும்.
நாடு முழுதும் தங்க நாற்கர சாலை அமைத்து கொடுத்த வாஜ்பாய் பெயரினை இச்சாலைக்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சம்பத்(தி.மு.க.,): தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிலையும், அவரது பெயரும் சூட்ட வேண்டும் என ஏற்கனவே சட்டசபையில் தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் நமச்சிவாயம்: மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் வைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. புதுச்சேரியில் வாஜ்பாய் பெயர் சூட்டுவது மட்டுமின்றி அவருக்கு சிலையும் வைக்க வேண்டும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: இது புதுச்சேரி அரசின் கொள்கை முடிவுக்குட்பட்டது. இது தொடர்பாக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.