/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 29, 2025 05:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் வரும் சட்டசபை தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, புதுச்சேரியில் வலுவான ஆட்சியை அமைப்போம் என பேசினார்.
மத்திய சட்டத்துறை அமைச்சரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டு, 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி, புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அனைவரும் கிளை அளவில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், வரும் 2 முதல் 23ம் தேதி வரை நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., வீட்டு தொடர்பு நிகழ்ச்சி, சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாள் விழா மற்றும் பேரணி ஆகியவை சம்பந்த மாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

