பிரதமர் வருகையை முன்னிட்டு பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை
பிரதமர் வருகையை முன்னிட்டு பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : பிப் 23, 2026 04:24 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் 1ம் தேதி பிரதமர் மோடி வருகை தந்து, பொது கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்க உள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பங்கேற்று, பிரதமர் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், எம்.எம்.எல்.,க்கள் கல்யாணசுந்தரம், சாய் சரவணன்குமார், தீபாய்ந்தன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
