தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை

 காரைக்காலில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை

 காரைக்காலில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை


ADDED : ஜன 26, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி பா.ஜ., காரைக்கால் மாவட்டம் சார்பில், நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா காரைக்கால் வருகை தந்தார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், ராஜசேகர் எம்.எல்.ஏ., ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, நிரவி திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளின் கிளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், காரைக்கால் மாவட்டத் தலைவர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் கணபதி, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்து கூற வேண்டும் என்றார். பின் சமுதாயத் தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. ஏற்பாடுகளை தொகுதி தலைவர்கள் மணிமாறன், சிவமாணிக்கவேல், பிரபு,மாநில செய்தி தொடர்பாளர்கள் அருள்முருகன், செல்வராஜ், மாநில பொது செயலாளர் மோகன்குமார், மாநில செயலாளர்அமுதா ராணி, மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us