/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., துவக்க விழா; உறுதிமொழி ஏற்பு
/
பா.ஜ., துவக்க விழா; உறுதிமொழி ஏற்பு
ADDED : ஏப் 07, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில் கட்சியின் 45-வது துவக்க தின விழா எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி, நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, தொகுதி தலைவர் புவனேஸ்வரி, முன்னாள் தொகுதி தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் சட்டசபை தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும் என, நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.