பா.ஜ.,தொழில், சமூக பிரிவு சங்க நிர்வாகிகள் சந்திப்பு
பா.ஜ.,தொழில், சமூக பிரிவு சங்க நிர்வாகிகள் சந்திப்பு
ADDED : பிப் 26, 2026 05:22 AM

புதுச்சேரி: பா.ஜ., சார்பில் தொழில் மற்றும் சமூக பிரிவுகளை சேர்ந்த சங்க நிர்வாகிகளை சந்திக்கும் தொடர் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிகை அலங்கார நலச்சங்கம், மருத்துவர் சங்கம் மற்றும் நாவிதர் பேரவை ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், அகத்தியர் மஹாலில் நடந்தது.
சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி., அணி தலைவர் கோவேந்தன், பட்டியல் அணி தலைவர் காத்தவராயன் மற்றும் விவசாய அணி தலைவர் பாரதிமோகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முன்வைத்தனர். அவை அனைத்தும் வரும் தேர்தல் வாக்குறுதிகளில் இணைக்கப்படும் என, உறுதிமொழி அளிக்கப்பட்டது. சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலனையும் முன்னிறுத்தி செயல்படுவோம் என்ற உறுதியும் தெரிவிக்கப்பட்டது.
