/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பா.ஜ., வலியுறுத்தல்
/
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பா.ஜ., வலியுறுத்தல்
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பா.ஜ., வலியுறுத்தல்
சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : நவ 03, 2025 04:38 AM
புதுச்சேரி: சபரிமலை சென்று வர புதுச்சேரியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க பா.ஜ., சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், போக்குவரத்து செயலர், ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
வரும் 16ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இரு மாதங்களுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாவிற்கு, புதுச்சேரி மாநிலத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வருவதற்கு அரசு போக்குவரத்து துறை சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.
மேலும் அய்யப்ப பக்தர்கள் தனித்தனி குழுவாக செல்வதற்கு அவர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பஸ் வசதி செய்து தர போக்குவரத்து துறை குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.