/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணியில் அ.தி.மு.க., இல்லாததால் பா.ஜ., போட்டியிட தயக்கம்
/
கூட்டணியில் அ.தி.மு.க., இல்லாததால் பா.ஜ., போட்டியிட தயக்கம்
கூட்டணியில் அ.தி.மு.க., இல்லாததால் பா.ஜ., போட்டியிட தயக்கம்
கூட்டணியில் அ.தி.மு.க., இல்லாததால் பா.ஜ., போட்டியிட தயக்கம்
ADDED : மார் 04, 2024 05:45 AM
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணியில் அ.தி.மு.க., இல்லாததால், தேர்தலில் போட்டியிட பா.ஜ., தயங்குகிறது என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது;
நாடு முழுதும் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டணி முடிவு இறுதி செய்யாததால் வேட்பாளர்கள்அறிவிக்கவில்லை. புதுச்சேரி தொகுதியில் பா.ஜ., போட்டியிடும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துவிட்டார்.
ஆனால் போட்டியிட பா.ஜ., சார்பில் யாரும் முன்விரவில்லை. வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
என்.ஆர்.காங்., பா.ஜ., ஆட்சி இருந்தாலும், கூட்டணியில் அ.தி.மு.க., இல்லாததால் தேர்தலில் போட்டியிட பா.ஜ., தயங்குகிறது.
இந்த நிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒப்பற்ற தலைவர்கள், மக்கள் நலனுக்காக வாழ்ந்தவர்கள் என பேசினார்.
பா.ஜ.வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லாத சூழ்நிலையில், மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை போஸ்டரில் பிரசுரித்து, பிரதமர் மோடி அ.தி.மு.க., தலைவர்களை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டு, தாமரைக்கு வாக்களியுங்கள் என புதுச்சேரி பா.ஜ., விளம்பரம் செய்துள்ளது ஏற்க முடியாது. இப்படி ஓட்டுசேகரிப்பதை பா.ஜ., நிறுத்தி கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க., துணையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ., அரசு, அ.தி.மு.க.,வுக்கு செய்த துரோகங்களை யாறும் மறக்கமாட்டார்கள். என்.ஆர்.காங்., பா.ஜ., கொள்கை ரீதியில் பொருந்தாத கூட்டணி என கூறினார்.

