தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., நாராயணசாமிக்கு பா.ஜ., தலைவர் அழைப்பு

 காங்., நாராயணசாமிக்கு பா.ஜ., தலைவர் அழைப்பு

 காங்., நாராயணசாமிக்கு பா.ஜ., தலைவர் அழைப்பு


ADDED : மார் 25, 2026 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காங்., கட்சியில் 'சீட்' மறுக்கப்பட்ட நாராயணசாமிக்கு, பா.ஜ., தலைவர் ராமலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

தே.ஜ., கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. காரணம், இண்டி கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகிறது. முன்னாள் முதல்வருக்கு 'சீட்' கொடுக்காமல் அவரது உழைப்பை புறம் தள்ளுகின்ற ஒரு நிர்வாகம் உள்ளது.

ராகுலின் நிர்வாகத் திறமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு குழப்பவாதி. யார் உண்மையானவர்கள் என்பதை கூட கணிக்கத் தெரியாத அரசியல்வாதி.

முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பா.ஜ.,தான் எதிர்காலத்தில் இந்தியாவை காப்பாற்றும் ஒரு சரியான கட்சியாக இருக்கும்.

ஆகையால் நீங்கள் இங்கே வந்தால் உங்களுக்கான உரிய மரியாதை கொடுப்போம். நீங்கள் இங்கே வாருங்கள். பெருந்தன்மையோடு அழைக்கிறோம். நீங்கள், பா.ஜ.,வில் சேர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுவதுதான் காங்., கட்சியின் வேலை. உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு எதிர்காலத்தில் வேண்டும் என்றால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்சி பா.ஜ.,. ஆகையால் நாங்கள் அன்போடு அழைக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us