/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை தொகுதியை முன்னேற்ற தொடர்ந்து முயற்சிப்பேன் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் உறுதி
/
முத்தியால்பேட்டை தொகுதியை முன்னேற்ற தொடர்ந்து முயற்சிப்பேன் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் உறுதி
முத்தியால்பேட்டை தொகுதியை முன்னேற்ற தொடர்ந்து முயற்சிப்பேன் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் உறுதி
முத்தியால்பேட்டை தொகுதியை முன்னேற்ற தொடர்ந்து முயற்சிப்பேன் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் உறுதி
ADDED : பிப் 14, 2025 04:28 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியை முன்னேற்ற தொடர்ந்து முயற்சித்து வருவதாக பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான், கடந்த 2015ம் ஆண்டு கல்லுாரி படிப்பை முடித்து, பொது வாழ்க்கையில் ஈடுபட துவங்கினேன். புதுச்சேரி அரசியலில் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறேன். புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில், தொகுதி மக்களுக்கு உணவு, உடை, பாய், பெட்ஷீட், ரெயின்கோட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் சேதமைடந்த வீடுகளுக்கு நிவாரண தொகை வழங்கியுள்ளேன்.
சேதமடைந்த படகுகளை சீரமைக்க நிவாரண தொகையுடன், மீன் பிடி வலைகள் வழங்கியுள்ளேன். தொடர்ந்து, மீனவர்கள் சோலை நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், கடலுக்கு நடுவே துாண்டில் முள் வளைவு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகனை, மீனவர்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை குறித்து பேச வைத்துள்ளேன்.
பின்னர், நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, சோலை நகரில், துாண்டில் முள் வளைவு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதனையடுத்து அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். மத்தியில், பா.ஜ., ஆட்சியும், மாநிலத்தில், பா.ஜ., என்.ஆர்.,காங்., ஆட்சியும் நடந்து வருவதால், மீனவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன்.
தொகுதியில், சுய தொழில் புரிய, அயன்பாக்ஸ், பிளம்பிங், எலக்ட்ரீசியன் தொழில் செய்பவர்களுக்கு உபகரணங்களும், பெண்களுக்கு தையல் மிஷின், தள்ளு வண்டி, பியூட்டி பார்லர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறேன். மேலும், ஊனமுற்றோர்களுக்கு வண்டிகள், முதியோர்களுக்கு சைக்கிள்களும், அவர்களுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து வருகிறேன்.
கடந்த சட்டசபை தேர்தலில், முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட போது, தொகுதியில் முக்கிய பிரச்னைகளான தரமான குடிநீரும், தொகுதி முழுதும் கேபிள் லைன் முழுதுமாக மாற்றி தெரு விளக்கு எரிய வைப்பேன் என உறுதியளித்தேன். ஆனால், நான் வெற்றி அடையாததால், என்னால் அதனை சரி செய்ய முடியவில்லை. இந்த பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
மேலும், அரசு மூலம் கிடைக்கும் முதல்வரின், மருத்துவ நிவாரண நிதி, முதியோர், ஊனமுற்றோர், விதவைகள் உதவித் தொகையும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வாங்கி தந்து வருகிறேன். பெற்றோர் இல்லாத குழந்தைகள், வறுமையில் பின் தங்கிய குழந்தைகளின் கல்வி கட்டணங்களை செலுத்தி வருகிறேன்.முத்தியால்பேட்டையில், நுாற்றாண்டு கண்ட, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னாத்தா அரசு பள்ளியில் சாதனை படைத்த 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப் டாப்பை ஊக்க பரிசாக வழங்கினேன். விளையாட்டில், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு காலணி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறேன். மாணவர்களுக்காக, காமராஜர் அரசு பள்ளியில் விளையாட்டு திடல் அமைத்து கொடுத்துள்ளேன். அப்பள்ளியில், பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வின் போது நடக்கும் சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியும், ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, அடையாள அட்டை மற்றும் விளையாட்டு சாதனங்களை வழங்கியுள்ளேன்.
என்னுடைய, செந்தில்குமரன் அறக்கட்டளை மூலம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன். கடந்த தீபாவளி பண்டிகையின்போது, 2 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி, அவர்களுக்கு 6 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொருட்களுடன், மின்சார அடுப்பு வழங்கினேன். தொடர்ந்து, பொங்கல் பண்டிகைக்கு மேலும், 2 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி, மொத்தம் 4 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு குக்கர் வழங்கினேன்.
அறக்கட்டளை மூலம் மருத்துவ முகாம், நடத்தி 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கண் அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய ஏற்பாடு செய்தேன். 400க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கியுள்ளேன்.
தொகுதியில் உள்ள கோவில்களில் திருப்பணி, ஆடித்திருவிழா, விநாயகர் சதுர்த்தி, இளைஞர் குழுவினர் விளையாட்டு போட்டிகள் என நன்கொடை வழங்கி வருகிறேன். தொடர்ந்து, தொகுதி மக்களுக்காக கடந்த 11 ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். முத்தியால்பேட்டை தொகுதியை முன்னேற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

