ADDED : ஏப் 26, 2026 08:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை பாரதிநகர் உமாசங்கர், முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மிஷன் வீதியில் உள்ள ஒய்ஸ்பீஸ் முதியோர் காப்பகத்தில் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
உமா சங்கரின் தந்தையும், பா.ஜ., அகில இந்திய ஓ.பி.சி., தேசிய பொறுப்பாளருமான காசிலிங்கம் அங்குள்ள முதியோர்களுக்கு காலை உணவு மற்றும் சிற்றுண்டியை வழங்கினார்.
ரெட்டியார் பாளையத்தில் உள்ள கருணை மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கிருஷ்ணா நகரில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் காமராஜ் நகர் தொகுதி நண்பர்கள் உமாசங்கருக்கு அஞ்சலி செலுத்தினர்.

