/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பத்திரிகையாளர் தினம் பா.ஜ., தலைவர் வாழ்த்து
/
பத்திரிகையாளர் தினம் பா.ஜ., தலைவர் வாழ்த்து
ADDED : நவ 16, 2025 03:39 AM
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி:
உண்மை, நேர்மை, பொறுப்பு ஆகிய மூன்று முக்கிய துாண்களின் மீது நம்முடைய ஜனநாயகம் திகழ்கிறது. அந்த துாண்களில் மிகப் பெரிய பங்கு வகிப்பது ஊடகங்கள் தான். சமூகத்தின் குரலாகவும், மக்களின் பிரச்னைகளை முன்வைத்து தீர்வு காணும் பாலமாகவும் செயல்படும் பத்திரிகையாளர் நண்பர்களுக்கு பா.ஜ., சார்பி ல், நன்றி.
நாட்டின் முன்னேற்றத்தையும், அரசு செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் உண்மையோடு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஊடக சகோதரர் - சகோதரிகளுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள். உண்மை செய்திகளை வழங்கும் உங்கள் ஒவ்வொரு முயற்சியும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாகும்.

