/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாபலி சக்கரவர்த்தி படத்துடன் தீபாவளி வாழ்த்து பேனர் பா.ஜ.,வினர் குழப்பம்
/
மகாபலி சக்கரவர்த்தி படத்துடன் தீபாவளி வாழ்த்து பேனர் பா.ஜ.,வினர் குழப்பம்
மகாபலி சக்கரவர்த்தி படத்துடன் தீபாவளி வாழ்த்து பேனர் பா.ஜ.,வினர் குழப்பம்
மகாபலி சக்கரவர்த்தி படத்துடன் தீபாவளி வாழ்த்து பேனர் பா.ஜ.,வினர் குழப்பம்
ADDED : அக் 25, 2025 11:12 PM
புதுச்சேரி: மாஜி அமைச்சரின் மனைவி, மகாபலி சக்கர வர்த்தி படத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வைத்த பேனர், பா.ஜ.,வினரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமாரின் மனைவி அண்ணா பிரபாவதி திருபுவனைத் தொகுதியில் போட்டியிட தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்.
அதனையொட்டி தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, புதுச்சேரி முக்கிய சாலை சந்திப்புகளில் மெகா சைஸ் பேனர்கள் வைத்திருந்தார்.
பேனரின் கீழ் பகுதியில் மக்கள் அமைச்சர் சாய் சரவணன்குமார் என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது.
நரகாசுரனை கொன்றதை கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு, மாலையாளிகள் ஓணம் பண்டிகையாக கொண்டாடும் விஷ்ணு பகவான், வாமனர் அவதாரத்தில் உலகை தனது காலால் இரண்டடியில் அளந்து, மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தி தலையில் வைத்த புராண படத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்திருப்பது, புதுச்சேரி பா.ஜ.,வினர் மட்டுமன்றி பொதுமக்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து சாய் சரவணன்குமார் கூறுகையில், ஒருவருக்கு சுக்கிர யோகம் ஏற்படும் போது அவருக்கு கண்ணில் பிரச்னை ஏற்படும்.
இதற்கு பரிகாரமாக சென்னை கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள வெள்ளீஸ்வரரை வணங்கினால் அவருடைய கண் பிரச்னை தீரும். சுக்கிர யோகமும் ஏற்படும் என ஆன்மிக ரீதியில் விளக்கமளித்தார்.
மேலும் அமைச்சர் பதவி பறிபோனபோது, அவர் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு கண்ணாடி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

