/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம்
ADDED : அக் 09, 2024 05:33 AM

புதுச்சேரி, : புதுச்சேரி மாநில பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கான ஆய்வு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தலைமை தாங்கி, மாநில அளவில் நடந்து வரும் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த பேசினார்.
இதில், பா.ஜ., எம்.எல்.எல்.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு, மாநில துணைத் தலைவர் பழனி, பொதுச் செயலாளர் மோகன்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.