தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லை; கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புகார்

மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லை; கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புகார்

மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பு இல்லை; கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புகார்


ADDED : டிச 01, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மக்கள் பிரதிநிதிகளுக்கு புதுச்சேரியில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என கவர்னரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., 6 பேர் புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த விழாவில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், அங்காளன் எம்.எல்.ஏ., வின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தரக்குறைவாக பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து நேற்று கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், சிவசங்கர், பா.ஜ.,வை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆகியோர் நேற்று ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.

அப்போது, மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கின்றனர். மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர்.

ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அங்காளன் எம்.எல்.ஏ.,வை மிரட்டியவர் மீது 22 கிரிமினல் வழக்கு உள்ளது. அரசு ஊழியராகவும் உள்ளார். அப்படி இருந்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

புகார் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவில்லை. சிவசங்கர் எம்.எல்.ஏ., விவகாரத்திலும் இப்படி தான் நடந்தது. போராட்டம் வெடித்த பிறகு எப்.ஆர்.ஐ., போட்டனர். இது என்ன நியாயம்.

மக்கள் பிரநிதியின் புகாருக்கே இப்படி என்றால், சமானிய மக்களின் புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுப்பர். இப்படி மோசமாக மிரட்டப்பட்டால் மக்கள் பணிகளை எம்.எல்.ஏ.,க்கள் எப்படி செய்ய முடியும் என, கொந்தளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அனைத்து பகுதிக்கும் சாப்பாடு

பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பேசுகையில், 'முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. முகாம்களில் தங்கி உணவு வாங்க பலர் அச்சப்படுவதால், அனைத்து பகுதிகளிலும் உணவு வழங்க வலியுறுத்தினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us