/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணியில் இருந்தும் பயனில்லை மத்திய அமைச்சரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்
/
கூட்டணியில் இருந்தும் பயனில்லை மத்திய அமைச்சரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்
கூட்டணியில் இருந்தும் பயனில்லை மத்திய அமைச்சரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்
கூட்டணியில் இருந்தும் பயனில்லை மத்திய அமைச்சரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குமுறல்
ADDED : மே 11, 2025 01:12 AM
கூட்டணியில் இருந்தும் வாரிய தலைவர் பதவி கிடைக்காமல் உள்ளதை தேர்தல் பொறுப்பாளரிடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மனம் குமுறினர்.
புதுச்சேரி பா.ஜ., சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஓட்டல் அண்ணாமலையில் நடந்த மைய குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் தேர்தல் குறித்த கருத்தகளை கேட்டறிந்தார்.
அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் வைத்த கருத்துகள் வருமாறு:
புதுச்சேரியில் ஆளும் கட்சியாக நாம் இருந்தாலும் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை. குறிப்பாக வாரிய தலைவர் பதவியை கூட நிரப்பவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் நாம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை.
குறிப்பாக மில்களை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தோம். அதனை செய்யவில்லை. இன்னும் ஓராண்டே உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு வரும் சட்டசபை தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டும்.
இதேபோல், கட்சியில் ஒற்றுமை இல்லாமல் உள்ளது. சில நிகழ்ச்சிகளுக்கு தகவல் சொல்கின்றனர். பல நிகழ்ச்சிகளுக்கு தகவல் சொல்வதில்லை. அமைச்சர்களுக்கும் தகவல் கிடைப்பதில்லை. இது ஏன் என்றும் தெரியவில்லை.
மேலும், கட்சிக்காக உழைத்த பலர் ஒதுங்கி நிற்கின்றனர். இவர்களை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தகுந்த பதவியில் தகுந்த நபர்கள் இருக்க வேண்டும். அவர்களுக்கும் பதவி கொடுக்க வேண்டும். அவர்களுடைய அனுபவம் தேர்தல் பணிக்கு உதவும் என, குமுறினர்.