/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தேசிய தலைவர் பாராட்டு ஜான்குமார் எம்.எல்.ஏ., குஷி
/
பா.ஜ., தேசிய தலைவர் பாராட்டு ஜான்குமார் எம்.எல்.ஏ., குஷி
பா.ஜ., தேசிய தலைவர் பாராட்டு ஜான்குமார் எம்.எல்.ஏ., குஷி
பா.ஜ., தேசிய தலைவர் பாராட்டு ஜான்குமார் எம்.எல்.ஏ., குஷி
ADDED : அக் 27, 2024 04:44 AM
புதுச்சேரி பா.ஜ.,வில் அமைப்பு தேர்தல் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகின்றது. இதுவரை நேரடியாக 29,114 பேரும், ஆன்லைனில் 93,729 என மொத்தம் 1,22,843 லட்சம் பேர், சேர்ந்துள்ளனர்.
வரும் 31ம் தேதிக்குள் 1.50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அதில், 1500 பேருக்கு மேல் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், போட்டி போட்டுக் கொண்டு உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். அதில், காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார், தனது தொகுதியில் 14,833 பேரை சேர்த்துள்ளார். புதுச்சேரி உறுப்பினர் சேர்க்கை தகவல்கள், டில்லி பா.ஜ., தலைமைக்கு எட்டிய நிலையில், பா.ஜ..தேசிய தலைவர் நட்டா, ஜான்குமார் எம்.எல்.ஏ.,வை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அப்போது, இதேபோல் அதிக உறுப்பினர்களை சேருங்கள். தொடர்ந்து கட்சி பணி ஆற்றுங்கள். நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஜான்குமார் எம்.எல்.ஏ., குஷியில் உள்ளார்.