அகில இந்திய காங்., தலைவர் மீது டி.ஐ.ஜி.,யிடம் பா.ஜ., மனு
அகில இந்திய காங்., தலைவர் மீது டி.ஐ.ஜி.,யிடம் பா.ஜ., மனு
ADDED : ஏப் 29, 2026 04:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில், மல்லிகார்ஜூனே கார்கே மீது சட்டநடவடிக்கை எடுக்ககோரி டி.ஐ.ஜி.,யிடம் புகார் மனு வழங்கினர்.
பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி என அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அரசியல் தரம் தாழ்ந்த முறையில் கடந்த 21.04.2026 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமர்சித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பிரதமரை விமர்சனம் செய்ததை கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, மாநில வழக்கறிஞர்கள் பிரிவு அமைப்பாளர் ரமேஷ், இணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் புதுச்சேரி பா.ஜ., வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில், மல்லிகார்ஜூனே கார்கே மீது சட்டநடவடிக்கை எடுக்ககோரி மனு வழங்கினர். அப்போது பா.ஜ., மாநில செயலாளர் புகழேந்தி, வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
