நலத்திட்டங்களை எடுத்து கூறி பா.ஜ., செல்வம் ஓட்டு சேகரிப்பு
நலத்திட்டங்களை எடுத்து கூறி பா.ஜ., செல்வம் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 11:18 PM

புதுச்சேரி: மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம் டி.என்.பாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
கடந்த 5 ஆண்டில் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, டி. என்.பாளையம், பகுதியில் வீடு இல்லாத 236 பேருக்கு 800 சதுர அடியில் இலவச மனை பட்டா பெற்று தந்தேன். அப்பகுதியில் 5 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் மலட்டாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அபிஷேகப்பாக்கம் முதல் டி.என். பாளையம் வரை சாலையை அமைத்து கொடுத்துள்ளேன். இப் பகுதியில் குடியிருந்து வரும் இருளர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கியுள்ளேன்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களை செய்துள்ளதாக கூறி தொகுதி மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
