/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 10, 2025 08:52 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டுமென, பா.ஜ., நிர்வாகிகளுக்கு தேசிய அமைப்பு பொது செயலாளர் சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி வந்துள்ள பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித் தார். சபாநாயகர் செல்வம் , அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், எம்.எல். ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, தீப்பாய்ந்தான், செல்வம், ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியை பலப்படுத்த வேண்டும்.
கடந்த முறையைவிட கூடுதலான இடங்களை கைப்பற்ற வேண்டும். அதற்கு அடித்தளமாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.
முன்னதாக, புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் உள்ள நிறுவனர் பண்டிட் தீன்தயாள் உருவச் சிலைக்கு தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

