தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பா.ஜ., மாநில நிர்வாகி திருமண வரவேற்பு; முதல்வர் பங்கேற்று வாழ்த்து

பா.ஜ., மாநில நிர்வாகி திருமண வரவேற்பு; முதல்வர் பங்கேற்று வாழ்த்து

பா.ஜ., மாநில நிர்வாகி திருமண வரவேற்பு; முதல்வர் பங்கேற்று வாழ்த்து


ADDED : பிப் 14, 2024 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 03:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பா.ஜ., மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் வருண் முத்துலிங்கம்-, அபிநயா திருமண வரவேற்பில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, மணமக்களை வாழ்த்தினார்.

புதுச்சேரி டாக்டர் தர்மன்,- டாக்டர் திலகவதி மற்றும் சிவக்குமார்- அபர்ணாதேவி தம்பதியின் மணமக்கள் பா.ஜ., மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் வருண் முத்துலிங்கம், அபிநயா திருமணம், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 11ம் தேதி நடந்தது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், ரிச்சர்ட், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன், தொழிலதிபர் தணிகைவேல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மறுநாளான நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி, பூரணாங்குப்பம், லகூன் சரோவர் பிரீமியர் ரிசார்ட்டில் திருமண வரவேற்பு நடந்தது.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பாராட்டினார்.

வரவேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஜான்குமார் எம்.எல்.ஏ. அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை, டாக்டர் தர்மன், டாக்டர் திலவகதி மற்றும் சிவக்குமார் அபர்ணாதேவி ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us