/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'எம்.பி., வைத்திலிங்கம் வெற்றியில் சந்தேகம்' பா.ஜ., மாநில தலைவர் 'பகீர்'
/
'எம்.பி., வைத்திலிங்கம் வெற்றியில் சந்தேகம்' பா.ஜ., மாநில தலைவர் 'பகீர்'
'எம்.பி., வைத்திலிங்கம் வெற்றியில் சந்தேகம்' பா.ஜ., மாநில தலைவர் 'பகீர்'
'எம்.பி., வைத்திலிங்கம் வெற்றியில் சந்தேகம்' பா.ஜ., மாநில தலைவர் 'பகீர்'
ADDED : நவ 07, 2025 07:16 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறியதாவது;
தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டினை கொண்டாடும் வகையிலும், வருங்கால சந்ததியினரிடம் கொண்டும் செல்லும் வகையில் நாளை (இன்று) மாலை 5:00 மணிக்கு புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் வந்தே மாதரம் 150 என்ற வா சகத்துடன் முழு பாடலும் பாடப்பட உள்ளது.
தொடர்ந்து சுதேசி உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இன்று முதல் வரும் 26ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் பேச்சு, கட்டுரை போட்டிகளை நடத்தப்படுகிறது.
8ம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி ஒற்றுமை ஓட்டம் காந்தி திடலில் நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
பி.எல்.ஏ., 2 முகவர்களை நியமித்து எஸ்.ஐ.ஆர்., பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் காங்., தி.மு.க., வினர் அதிகாரிகளை மிரட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அரசின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தர வே ண்டும்.
ஓட்டு திருட்டு புதுச்சேரியில் இருந்திருந்தால், வைத்திலிங்கம் எம்.பி., ஓட்டு திருட்டில் தான் வெற்றி பெற்றார் என்ற சந்தேகம் உள்ளது' என்றார்.
தொடர்ந்து வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு கொண்டாட்ட லோகோவை வெளியிட்ட னர். பேட்டியின் போது, வந்தே மாதரம் நிகழ்ச்சி மாநி ல பொறுப்பாளர் வெற்றிசெல்வம், மாநில பொது செயலாளர் மோகன்குமார், மாநில ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன் உடனிருந் தனர்.

