/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு பா.ஜ., மாநில தலைவர் வாழ்த்து
/
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு பா.ஜ., மாநில தலைவர் வாழ்த்து
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு பா.ஜ., மாநில தலைவர் வாழ்த்து
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு பா.ஜ., மாநில தலைவர் வாழ்த்து
ADDED : ஆக 19, 2025 08:01 AM
புதுச்சேரி : தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி பரிந்துரையின்படி, பா.ஜ., மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தமிழக மக்கள் மீது பிரதமர் வைத்துள்ள பாசத்திற்கும், நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.இவர் இரண்டு முறை எம்.பி., யாகவும், மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட சேவை ஆற்றியவர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர். ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கவர்னராக சிறப்பாக பணியாற்றியவர். இந்த நியமனம், பா.ஜ., கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் தென்னிந்தியாவிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அங்கீகாரமாகும்.
இதற்கு புதுச்சேரி பா.ஜ., மற்றும் பொதுமக்கள் சார்பில், ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

