/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மாநில செயலாளர் தார்பாய்கள் வழங்கல்
/
பா.ஜ., மாநில செயலாளர் தார்பாய்கள் வழங்கல்
ADDED : நவ 15, 2024 04:21 AM

புதுச்சேரி: பிச்சைவீரன்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு தார்பாய்களை பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் வழங்கினார்.
புதுச்சேரி மாநில பா.ஜ., செயலாளர் சரவணன், உழவர்கரை தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக உழவர்கரை தொகுதியில் உள்ள குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக தார்பாய்கள் வழங்க முடிவு செய்தார்.
அதன்படி, பிச்சைவீரன்பேட்டையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு தார்பாய்களை பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் நேற்று வழங்கினார்.
இதில், ஜோசப், வெங்க டேசன், ஆறுமுகம், ஆல்பெர்ட் ராஜ், ராஜா, தாமஸ், ஜான்சன், ஆனந்த், அருள் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், தொகுதி முழுதும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு தார்பாய்கள் வழங்கப்பட உள்ளது.
எனவே தார்பாய் தேவைப் படுபவர்கள் 98658 88499 எண்ணில் தொடர்பு கொண்டால், உடனடியாக அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.