/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமிக்கு பா.ஜ., நன்றி
/
முதல்வர் ரங்கசாமிக்கு பா.ஜ., நன்றி
ADDED : ஜன 20, 2024 05:57 AM
புதுச்சேரி : ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, வரும் 22ம் புதுச்சேரியில் விடுமுறை அளித்த முதல்வர் ரங்கசாமிக்கு, பா.ஜ., நன்றி தெரிவித்துள்ளது.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அறிக்கை;
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அன்று அரை நாள் மத்திய அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, 22ம் தேதி, அரசு விடுமுறை அறிவித்துள்ளார். இது புதுச்சேரி மாநில ஆன்மிக பக்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. முதல்வர் ரங்கசாமி சிறந்த ஆன்மிகவாதி.
ஆன்மிக பேரலை நாடு முழுதும் பரவி வரும் இந்த நேரத்தில், முதல்வரின் விடுமுறை அறிவிப்பு, புதுச்சேரி மக்களுக்கு குறிப்பாக, அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கும் ராமர் கோவில் கும்பாபிேஷக விழாவை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் அவர்கள் நமது கலாசார பெருமைகளை அறிய முடியும்.
அப்படிப்பட்ட சூழலை உருவாக்கித் தந்த முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி பா.ஜ., மற்றும் ராம பக்தர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.