/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராகுல் உருவ பொம்மை எரிக்க முயற்சி பா.ஜ., வினர் போராட்டத்தால் பரபரப்பு

ADDED : பிப் 11, 2024 02:48 AM

புதுச்சேரி: பிரதமரை ராகுல் அவதுாறாக பேசியதை கண்டித்து பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திரா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.சி., அணி தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, ரிச்சர்டு, பா.ஜ., பொதுச்செயலாளர் மவுலித்தேவன், செயலாளர் சாம்ராஜ், வெற்றிச்செல்வன், நிர்வாகிகள் சக்திவேல், உமாபதி, செல்வகணபதி, ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காங்., மற்றும் ராகுலை கண்டித்து பா.ஜ.,வினர் கோஷம் எழுப்பினர். பின், மறைத்து வைத்திருந்த ராகுல் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். உருளையன்பேட்டை போலீசார் தடுத்து பறிக்க முயன்றதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின், போலீசார் உருவபொம்மை பறித்து சென்றனர்.