தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்க முடியாது :பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பூ திட்டவட்டம்

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்க முடியாது :பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பூ திட்டவட்டம்

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்க முடியாது :பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பூ திட்டவட்டம்


ADDED : ஏப் 05, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 06:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 'த.வெ.க., தலைவர் விஜயின் மனதில் பா.ஜ., உள்ளதால்தான் புதுச்சேரி பிரசாரத்தின் போது அவரது கட்சி வேட்பாளருக்கு பதிலாக பா.ஜ., வேட்பாளர் பெயரை கூறினார்' என பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பூ கூறினார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து ்பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியிலான ரங்கசாமி ஆட்சி, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதனால், இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.

தமிழகத்தில் ஊழல் ஆட்சி மட்டுமே நடக்கிறது. 8, 9ம் வகுப்பு சிறுவர்களுக்கு கூட சாராயம், போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது. ஆனால், புதுச்சேரியில் முன்னேற்றமான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, சுற்றுலா பகுதி என்பதால் ரெஸ்டோ பார்கள் அதிகரித்து இருந்தாலும், கட்டுப்பாடுகள் உள்ளது.

மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதியை அளித்து 5 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சி நடத்தியது. டீசல் விலைக்கு மத்திய அரசு வரிச் சலுகை அளித்துள்ளது. ஆனால், அதைப்பற்றி பேச தமிழக அரசுக்கு வக்கில்லை. சிலிண்டர் தட்டுப்பாட்டை மட்டும் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்க முடியாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது மிகப்பெரிய நடவடிக்கை.

இதுகுறித்து பல மாநிலங்களுடன் பேச வேண்டியுள்ளது. தேவையான விஷயத்தை பா.ஜ., காலத்தோடு செய்யும்.

காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள ராகுல் பிரதமர், ஜனாதிபதியாக கூட ஆவார் என சொல்வார். ராகுல் பிரதமராவது நீண்டதுார கனவாக மட்டுமே இருக்கும்.

தமிழகம், புதுச்சேரியில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். விஜய் நேற்று தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டு விடுங்கள், அவரைப்பற்றி பேச வேண்டாம். அவர் மனதில் பா.ஜ. உள்ளதால் தான் புதுச்சேரி பிரசாரத்தின் போது அவர் கட்சி வேட்பாளருக்கு பதிலாக பா.ஜ., வேட்பாளர் பெயரை கூறியுள்ளார்.

இவ்வாறு குஷ்பூ கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us