தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., - தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., மகளிரணி பேரணி

 காங்., - தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., மகளிரணி பேரணி

 காங்., - தி.மு.க.,வை கண்டித்து பா.ஜ., மகளிரணி பேரணி


ADDED : ஏப் 24, 2026 10:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 10:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளை கண்டித்து புதுச்சேரியில் பா.ஜ., மகளிரணி சார்பில் பேரணி நடந்தது.

புதுச்சேரி, மறைமலையடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மகளிரணி மாநில தலைவர் தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். மகளிரணி பொறுப்பாளர் ஜெயந்தி, மாநில துணை தலைவர் ஜெயலட்சுமி, ஆடலரசன் முன்னிலை வகித்தனர். பேரணியை, கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வம், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அசோக் பாபு, விக்ரமன், மாநில துணைத் தலைவர்கள் பாஸ்கர், அமாவாசை, பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணி மறைமலையடிகள் சாலை வழியாக பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையை சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள், மகளிர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us