ADDED : ஏப் 27, 2026 10:13 PM

புதுச்சேரி: புதுச்சேரியில், பா.ஜ., மகளிர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
மகளிர் 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறவிடாமல் செய்த காங்., - தி.மு.க., ஆகிய கட்சிகளின் செயல்களை கண்டித்து, இந்திரா நகர் சட்டசபைத் தொகுதி, பிரியதர்ஷினி நகரில், உள்ள தனியார் மஹாலில் கண்டன பொது கூட்டம் நடந்தது.
மாநில பா.ஜ., மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வனிதா சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணைத் தலைவர் ஜெயலட்சுமி, உழவர்கரை மாவட்ட பொறுப்பாளர் தமிழ்மாறன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் முத்து, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன் செய்திருந்தார்.
