மா.கம்யூ., அலுவலகத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
மா.கம்யூ., அலுவலகத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 17, 2026 04:09 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தொகுதி மறுவரையறை சட்டத்தை எதிர்த்து மா. கம்யூ., அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வரும் லோக்சபா தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டி கூட்டணி சார்பில், போராட்டங்கள் நடந்து வருகிறது. ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள மா. கம்யூ., தலைமை அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜாங்கம், கொளஞ்சியப்பன், ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொகுதி மறுவரை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு தென் மாநிலங்களை புறக்கணிக்ககூடாது என, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
