sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

/

திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு


ADDED : ஜூலை 27, 2025 07:37 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மொரட்டாண்டியில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று எழுந்தருளிய திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திருப்பதி ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி நேற்று மாலை 5 மணிக்கு, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் எழுந்தருளினார்.

அவருக்கு புதுச்சேரி வேதபாரதி சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருவாராதனம், தோமாலை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், பள்ளி மாணவர்களின் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், அர்ச்சனை, கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் மற்றும் ஏகாந்த சேவை நடந்தது.

இன்று காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணிவரை சுப்ரபாதம், வாசுதேவ புண்ணயாகவாசனம், பூதசுத்தி முதலான கிரியைகள், நித்திய திருவாராதனம், அபிேஷக சங்கல்பம், அபிேஷக கலச ஸ்தாபனம், சிறப்பு திருமஞ்சனம், நீராட்டம், தோமாலை, திவ்ய பிரபந்த சேவை, அர்ச்சனை நடக்கிறது.

பின் முதல்கால பூஜை, வேத திவ்ய பிரபந்த ஆகம சாற்றுமுறை, தீபாராதனை, சிறப்பு புஷ்பயாகம், இரண்டாம் கால பூஜை, மகா மங்கள ஹாரத்தி, மகா ஆசீர்வாதம் நடக்கிறது.

பூஜைகள் அனைத்தும், திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யா பகடல் தலைமையில் நடக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி தமிழ்நாடு செயலாளர் வெங்கட்ராமன், புதுச்சேரி தலைவர் பட்டாபிராமன், பஜனோத்ஸவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us