
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் உதவும் பேரியக்கம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கி சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.
முகாமை, புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன், ஜிப்மர் ரத்த வங்கியின் பொறுப்பாளர் வடிவேல், உதவும் பேரியக்கத்தின் நிறுவனர் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., தொழிலதிபர் ராஜவேலு, கலைப் பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர்.
முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.