ADDED : அக் 17, 2024 12:33 AM

வில்லியனுார் : அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ஏழுநாள் சிறப்பு முகாம் நடந்தது.
பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சாலை சிவசெல்வம் முன்னிலை வகித்தார்.
நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி வீரமுத்து வரவேற்றார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன், பேராசிரியை அலமேலுமங்கை, ஈகோ பவுண்டேஷன் புபேஷ்குப்தா, பள்ளி முதல்வர் வரலட்சுமி மற்றும் அரும்பார்த்தபுரம் திரவுபதி அம்மன் ஆலய சிறப்பு அதிகாரி வேலாயுதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, மாணவர்களை பாராட்டினர்.
முன்னதாக முகாமை புதுச்சேரி நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சதீஷ்குமார் துவக்கி வைத்தார். முகாமில் அரும்பார்த்தபுரம் பகுதியில் துப்புரவு பணிகள், கோவிலில் உழவாரப்பணி, இயற்கை பேரிடர் தற்காப்பு பயிற்சி, மரம் நடுவிழா மற்றும் சிறுதானிய உணவு வகை கண்காட்சி நடந்தது.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கலைச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கரிகால்வளவன், சரண்ராஜ் ஆகியோர் செய்தனர்.
