/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புளு ஸ்டார்ஸ் பள்ளி இறகு பந்து போட்டியில் வெற்றி
/
புளு ஸ்டார்ஸ் பள்ளி இறகு பந்து போட்டியில் வெற்றி
ADDED : அக் 31, 2024 05:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை துணை இயக்குனரகம், வட்டம் 4 சார்பில், இறந்த பந்து போட்டி நடந்தது. அதில், புளு ஸ்டார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் அணியினர் 14,17, 19 ஆகிய பிரிவுகளில், இரண்டாம் இடத்தையும், ஆண்கள் அணியில், 14 வயதினர் பிரிவில், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில், சிறப்பாக விளையாடிய 9ம் வகுப்பு மாணவர்கள் மோனிகா, யுகேந்திரன் இருவரும் ஏனாமில் நடக்க உள்ள மாநில அளவிலான இறகு பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரிசு வாங்கிய மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் உதயகுமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் செல்வம் ஆகியோர் பாராட்டினர்.