/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படகு குழாமில் ரூ. 24.5 லட்சம் வருவாய்
/
படகு குழாமில் ரூ. 24.5 லட்சம் வருவாய்
ADDED : ஆக 18, 2025 04:00 AM

அரியாங்குப்பம்: தொடர் விடுமுறையால் நோணாங்குப்பம் படகு குழாமில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, 24.5 லட்சம் ரூபாய் சுற்றுலாத்துறைக்கு வருவாய் கிடைத்தது.
வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் புக் செய்ய முடியாமல் வெளி இடங்களில் தங்கும் நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், கடலுார் சாலை நோணாங்குப்பம் படகு குழாமில், சுதந்திர தினம், வார விடுமுறையான சனி, ஞாயிறு என, தொடர் விடுமுறையால், படகு குழாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து, படகு சவாரி செய்தனர். மூன்று நாட்களில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து, சுற்றுலா துறைக்கு மொத்தமாக 24.5 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.