தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுலாத்துறை அலுவலகம் முற்றுகை படகு உரிமையாளர்கள் போராட்டம்

 சுற்றுலாத்துறை அலுவலகம் முற்றுகை படகு உரிமையாளர்கள் போராட்டம்

 சுற்றுலாத்துறை அலுவலகம் முற்றுகை படகு உரிமையாளர்கள் போராட்டம்


ADDED : பிப் 24, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுற்றுலா படகு போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள அரசை கண்டித்து சுற்றுலாத்துறையை படகு உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி வீரம்பட்டினம் பகுதியில் கடந்த 19ம் தேதி சுற்றுலா பயணிகள் ஏற்றி சென்ற படகு, முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், பெங்களூரை சேர்ந்த சோனியா, 33; உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் அரியாங்குப்பத்தை சேர்ந்த படகு உரிமையாளர் சதீஷ் மற்றும் படகை இயக்கிய தங்கமணி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, சுற்றுலா படகுப் போக்குவரத்தை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், படகு உரிமையாளர்கள் உப்பளம் சாலையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

போராட்டத்திற்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து முற்றுகை மற்றும் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us