sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 2ம் நாளாக படகு சவாரி நிறுத்தம்

2ம் நாளாக படகு சவாரி நிறுத்தம்

2ம் நாளாக படகு சவாரி நிறுத்தம்


ADDED : டிச 15, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 05:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நோணாங்குப்பம் படகு குழாமில், இரண்டாவது நாளாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.

தொடர் மழையால், வீடூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், கடந்த 2ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த 5 படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. ஒரு படகு மரக்காணம் அருகே கண்டு பிடிக்கபட்டது. மற்ற 4 படகுகள் மாயமானது.

வெள்ளத்தில், பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, குடில்கள், கீற்று குடைகள் அடித்து செல்லப்பட்டன. படகு குழாம் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வீடூர் அணையில் இருந்து சமீபத்தில் திறக்கப்பட்ட உபரி நீர், சங்கராபரணி ஆறு வழியாக, நோணாங்குப்பம் ஆற்றில் செல்வதால், நேற்று இரண்டாவது நாளாக, படகு சவாரி நிறுத்தப்பட்டது.

வார விடுமுறை நாட்களில், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் படகு குழாமில் குவிந்து வரும் நிலையில், படகு சவாரி இல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us