/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போத்தீசில் கோடை திருவிழா வாடிக்கையாளர்களுக்கு பரிசு
/
போத்தீசில் கோடை திருவிழா வாடிக்கையாளர்களுக்கு பரிசு
போத்தீசில் கோடை திருவிழா வாடிக்கையாளர்களுக்கு பரிசு
போத்தீசில் கோடை திருவிழா வாடிக்கையாளர்களுக்கு பரிசு
ADDED : அக் 01, 2024 06:06 AM

புதுச்சேரி: போத்தீஸ் சூப்பர் ஸ்டோர் சார்பில் நடந்த கோடை திருவிழாவில், வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மொபட், வாஷிங் மிஷின் உள்ளிட்ட வீட்டு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி போத்தீஸ் சூப்பர் ஸ்டோரில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கோடை திருவிழா, கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை திருவிழா கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை நடந்தது.
இந்த விழாவில், ஏராளமான வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு முதல் பரிசாக டி.வி.எஸ்., ஸ்கூட்டி மற்றும் எலக்ட்ரானிக் சைக்கிள், ஏ.சி., பிரிஜ், வாஷிங் மிஷின், டி.வி., ஏர் கூலர், காஸ் ஸ்டவ் போன்ற பரிசு பொருட்களை போத்தீஸ் பொது மேலாளர் பாலமுருகன் வழங்கினார்.
விழாவில், சூப்பர் ஸ்டோர் சீனியர் மேலாளர் அபுபக்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தோபா பிராண்ட் மேலாண் இயக்குனர் செந்தில்குமார், அவசக்தி பிராண்ட் திஷா, மார்போ பிராண்ட் அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலாளர் மகேஷ்வரன் மற்றும் போத்தீஸ் ஊழியர்கள் செய்திருந்தனர். சூப்பர் ஸ்டோர் மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.