sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இறந்த மூதாட்டியின் உடல் தானம்

/

 இறந்த மூதாட்டியின் உடல் தானம்

 இறந்த மூதாட்டியின் உடல் தானம்

 இறந்த மூதாட்டியின் உடல் தானம்


ADDED : பிப் 24, 2026 04:22 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இறந்த மூதாட்டியின் கண்கள் மற்றும் உடல் தானமாக வழங்கப்பட்டது.

லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், முதல் குறுக்கு வீதியை சேர்ந்தவர் சீதாராமன் மனைவி சாந்தி, 80; உடல் நலக்குறைவால், 21ம் இறந்தார். அவரது கண்கள் மற்றும் உடலை தானமாக வழங்க மகள்கள் மேகலா, விமலா, மருமகன்கள் ராம்குமார், ராமகிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தனர்.

இதுகுறித்து, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டனர். அவரது தகவலின் பேரில், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அர்ச்சிஷா தலைமையில் செவிலியர்கள் பாக்கியலட்சுமி, அப்ரின் ஆகியோர் இறந்த சாந்தியின் வீட்டிற்கு சென்று கருவிழிகளை சேகரித்தனர். பின், அவரது உடல் கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மூலம் வழங்கப்பட்டது. தன்னார்வலர் எத்தியன் போஸ், ரத்தம், கண் மற்றும் உடல் தான ஆலோசகர் கந்தசாமி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை செவிலிய அதிகாரி ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

கண் மற்றும் உடல் தானம் குறித்து குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தை பெற்று சரியான நேரத்தில் தகவல் தெரிவித்த செவிலிய அதிகாரி ஜெயலட்சுமிக்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். கண் தானம் வழங்கியவரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us