ADDED : செப் 05, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:புதுச்சேரி அபிநயா முதியோர் காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட சிவா என்பவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரின் கண்கள், உடலை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.
பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையின் ஆலோசகர் கந்தசாமி முன்னிலையில், புதுச்சேரி அரசு கண் வங்கி மூலம், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அர்பித்குப்தா தலைமையில் செவிலியர்கள் அதிர்ஷ்டவாணி, மோகனப்பிரியா ஆகியோர் கண்களை தானம் பெற்றனர்.
அரசு மருத்துவக் கல்லு ாரி மருத்துவர்கள் அருணா, சண்முகநாதன் தலைமையில், உடலை தானமாக பெற்றனர். ஏற்பாடுகளை பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை ஊடகப் பிரிவு இருசப்பன் செய்திருந்தார்.