/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல்
/
வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல்
ADDED : நவ 10, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வனத்துறை அருகே உள்ள வாய்க்காலில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கடலுார் சாலை ஏ.எப்.டி. மில் ரயில்வே கேட்டில் இருந்து வனத்துறை வளாகத்தை ஒட்டி செல்லும் சாலையோர வாய்க்காலில் நேற்று மதியம் 1:30 மணிக்கு, 60 வயது மதிக்க அடையாளம் தெரியாத நபர் உடல் மிதந்தது.
உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.