/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான நிலையம், கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை புதுச்சேரியில் திடீர் பரபரப்பு

ADDED : மே 16, 2025 02:20 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அதில் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் உள்ள கவர்னர் மாளிகைக்கு கடந்த ஏப்ரல் 14, 23 மற்றும் மே 9, 13ம் தேதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனையில் அனைத்தும் புரளி என தெரிய வந்தது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில், 'டார்க் நெட்' செயலி மூலம் இ-மெயில் வந்துள்ளதால், மிரட்டல் ஆசாமியை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 10:30 மணி அளவில் எஸ்.பி., ரகுநாயகம் தலைமையிலான வெடிகுண்டு நிபுணர்கள், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் மோப்ப நாய் டோனியுடன் லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து இக்குழுவினர் பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கருடன் சேர்ந்து கவர்னர் மாளிகையில் காலை 11:30 மணி முதல் 12 மணி வரை சோதனை நடத்தினர். இங்கும் எதுவும் சிக்கவில்லை.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்த மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது. அதனடிப்படையில் விமான நிலையம் மற்றும் கவர்னர் மாளிகையில் சோதனை நடத்தியதாக கூறினர்.
போலீசாரின் இந்த அதிரடி சோதனை திடீர் பரபரப்பை ஏற்படுத்திய போதி லும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.