/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
/
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 27, 2025 07:05 AM
புதுச்சேரி: புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம்,ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
மிரட்டல் வரும் வி.பி.என்., ஐ.டி., வெளிநாட்டில் இருந்து வருவதால், போலீசார் அதன் தகவலை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக இ- மெயில் ஐ.டி.,க்கு, நேற்று காலை 10:30 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது.
தகவலறிந்த எஸ்.பி., சுருதி தலைமையிலான இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தீயணைப்பு துறை, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. காலை 10:45 மணி முதல் 12:00 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வராமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல் வர துவங்கியுள்ளது போலீசார் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

