தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரியில் பரபரப்பு

 ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரியில் பரபரப்பு

 ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரியில் பரபரப்பு


ADDED : டிச 22, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு, இ--மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவல கம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட் ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. மிரட்டல் வரும் வி.பி.என்., ஐ.டி., வெளிநாட்டில் இருந்து வருவதால், போலீசார் அதன் தகவலை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு இ--மெயில் மூலம், நேற்று காலை 10:30 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்தது. தகவலறிந்த எஸ்.பி., சுருதி தலைமையிலான இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தனியார் ஓட்டலுக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்ப நாய் 'டோனி' உதவியுடன் ஓட்டலின் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வராமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இ--மெயில் வெடிகுண்டு மிரட்டல் வர துவங்கியுள்ளது. இது போலீசார் மற்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us