
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : விநாயகம்பட்டு அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக சைரா உமென்ஸ் எம்பவர்மென்ட் தலைவர் ராஜலட்சுமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஆசிரியைகள் வானதி, விசாலாட்சி, ஜெயஸ்ரீபா, மாலதி, கிருத்திகா, தமிழ்தென்றல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

