/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தக கண்காட்சி பரிசளிப்பு விழா
/
புத்தக கண்காட்சி பரிசளிப்பு விழா
ADDED : டிச 20, 2024 04:19 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து வரும் 28வது தேசிய புத்தக கண்காட்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்கினார்.
புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் 28வது தேசிய புத்தக கண்காட்சி கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 22ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் தினமும் ஒரு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. 7வது நாளான நேற்று பேச்சு, கவிதை போட்டி மற்றும் கவியரங்கம் நடந்தது.
போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த ராஜலட்சுமி, மணி, பாரதி கோவிந்தம்மாள் ஆகியோருக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்கி பாராட்டினார். கண்காட்சி குழுத் தலைவர் பாஞ் ராமலிங்கம், செயலர் முருகையன், ஆனந்தன், கலைமாமணி நெய்தல் நாடன், பேராசிரியை லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.